அப்போது விவசாயிகள் அனைவரும் கையில் தேங்காய், நிலக்கடலை, எள் ஆகியவற்றை கையில் வைத்துக்கொண்டு தமிழக அரசின் ரேசன் கடைகளில் இந்தோனேஷியா மற்றும் மலேசியாவிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் பாமாயிலை தடை செய்து தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகளிடமிருந்து தேங்காய், நிலக்கடலை, எள் ஆகிய எண்ணெய் வகைகளை கொள்முதல் செய்து ரேசன் கடையில் மானிய விலையில் விற்பனை செய்யக்கோரி கோஷங்களை எழுப்பியவாறு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுக்குறித்து தகவலறிந்த நெமிலி போலீஸ் இன்ஸ்பெக்டர். இலட்சுமிபதி மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களோடு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போலீசார் அனைவரையும் கைது செய்து வேனில் ஏற்றி வழக்கு பதிவு செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர். பின்பு மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா
No comments:
Post a Comment