நெமிலியில் விவசாயிகள் குறைத்தீர்வு கூட்டம்! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 14 February 2024

நெமிலியில் விவசாயிகள் குறைத்தீர்வு கூட்டம்!


இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி தாலுகா அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைத்தீர்வு கூட்டம் தலைமையிடத்து துணை தாசில்தார். பரமேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நெற்பயிரில் காட்டுபன்றிகள் புகுந்து நாசம் செய்வதால் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். வேளாண்மை துறையில் உள்ள நெல் விதைகளின் விவரங்களை விவசாயிகளுக்கு தெரிவிக்க வேண்டும். சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை பணிக்காக அடைக்கப்பட்ட ஏரி நீர்வரத்து கால்வாய்களை தூர் வார வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர். இதில் அனைத்து துறை அலுவலர்களும், விவசாயிகளும் கலந்துகொண்டனர்.


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா. 

No comments:

Post a Comment

Post Top Ad