புல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு ராணிப்பேட்டையில் முன்னாள் ராணுவத்தினர் நினைவஞ்சலி செலுத்தினர். - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 15 February 2024

புல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு ராணிப்பேட்டையில் முன்னாள் ராணுவத்தினர் நினைவஞ்சலி செலுத்தினர்.


கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையின் புல்வாமா பகுதியில் ராணுவ வாகனங்கள் சென்றபோது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலின் ஐந்தாம்ஆண்டு நினைவு நாள்  அனுசரிக்கப்பட்டது.

அந்த தாக்குதலில் தியாகம் செய்த வீரர்களுக்கு ராணிப்பேட்டை முத்துக்கடை காந்தி சிலை அருகில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் ராணிப்பேட்டை மாவட்ட ஒருங்கிணைந்த ராணுவ படைவீரர்கள் மற்றும் துணைவியார்கள், ராணுவ அனைத்திந்திய வீரர்கள் நல சங்கத்தின் சார்பாக ராணுவ வீரர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தினர். இதில் துணை ராணுவ படைவீரர்கள் நல சங்கத்தின் தலைவர் பி.ஸ்டேன்லி, பொதுச் செயலாளர் ஜெயராமன், துணைத் தலைவர் வெங்கடேசன், நிர்வாகிகள்  ஆனந்தன், உமாமகேஸ்வரன், சேகர், லட்சுமணன், விஜயன், புருஷோத்தமன், கோதண்டன் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் சமுக ஊடகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் மாவட்ட துணை தலைவர் ஆர்ஜே. சுரேஷ்குமார் முன்னாள் ராணுவவீரர்கள், அவர்கள் துணைவியார்கள், பொதுமக்கள் திரலாக கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.


- சிறப்பு செய்தியாளர் சுரேஷ்குமார்.

No comments:

Post a Comment

Post Top Ad