நெமிலி அருகே புதிய அங்கன்வாடி கட்டிடம் காணொளி வாயிலாக தமிழக முதல்வர் திறப்பு! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 19 February 2024

நெமிலி அருகே புதிய அங்கன்வாடி கட்டிடம் காணொளி வாயிலாக தமிழக முதல்வர் திறப்பு!


ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றியம் வெளிதாங்கிபுரம் ஊராட்சியில் பாலகிருஷ்ணாபுரத்தில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். 

இதில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர். சுந்தரம்மாள் பெருமாள் கலந்துக்கொண்டு குத்துவிளக்கு ஏற்றினார். இதில் நெமிலி மத்திய ஒன்றிய திமுக கழக செயலாளர் எஸ்.ஜி.சி.பெருமாள், வெளிதாங்கிபுரம் ஊராட்சி மன்ற தலைவர். கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி மன்ற துணை தலைவர். தணிகைமலை, வட்டார வளர்ச்சி அலுவலர். சைபுதின், நெமிலி மத்திய ஒன்றிய அவைத்தலைவர் பா.செ.நரசிம்மன், மாவட்ட பிரதிநிதி. சம்பத், கிளை கழக செயலாளர்கள். செல்லப்பன், சுரேஷ், கிராம ஊராட்சி செயலாளர். ரத்தினம் மற்றும் கிராம பொது மக்கள் இதில் கலந்து கொண்டனர்.


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா 

No comments:

Post a Comment

Post Top Ad