நெமிலி அரசு பள்ளி முன்னாள் மாணவர்களின் முப்பெரும் விழா! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 19 February 2024

நெமிலி அரசு பள்ளி முன்னாள் மாணவர்களின் முப்பெரும் விழா!


ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அரசு மேல்நிலைப் பள்ளியில் 1986-87 ஆம் வருடம் பத்தாம் வகுப்பு படித்த மாணவர்களின் 4-ஆம் ஆண்டு சந்திப்பு நிகழ்ச்சி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தங்களுடன் படித்த சந்திராயன் 3 விஞ்ஞானி அப்துல் ஹமீதுக்கு பாராட்டு விழா, வாழ்நாள் சாதனையாளர்கள், சமூக சேவகர்கள் பாராட்டு விழா மற்றும் நண்பர்களின் சங்கம விழா உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற்றது. 

இதில் முன்னாள் மாணவர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு ஒருவரை ஒருவர் வாழ்த்தி மகிழ்ந்தனர். இந்நிகழ்வில் நெமிலி தொழிலதிபர். கடிகாசலம், நெமிலி பால பீடத்தின் பீடாதிபதி. எழில்மணி, நடராஜன் மருத்துவமனை நிறுவனர். டாக்டர் நடராஜன், தொழிலாதிபர். பசுபதி உள்ளிட்டோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்தனர். இதனை தொடர்ந்து ஒவ்வொருவரும் தங்கள் அனுபவங்களையும் தங்கள் பள்ளி காலங்களில் நிகழ்ந்த நினைவுகளையும் நினைவுகூர்ந்து பேசி மகிழ்ந்தனர். 


பல்வேறு துறைகளில் உள்ள இவர்கள் அவரவர்கள் துறை சார்ந்த அனுபவங்களையும், அறிவுரைகளையும் வழங்கினர். தன்னுடன் பயின்ற விஞ்ஞானி அப்துல் ஹமீதுக்கு விருதுகளை வழங்கி புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.‌ இறுதியாக குழு புகைப்படம் எடுத்தனர். இதில் அதிமுக நகர பொருளாளர். நவுநீதகிருஷ்ணன், மாணவரணி செயலாளர். முருகன், தாமோதரன், சங்கர், ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா. 

No comments:

Post a Comment

Post Top Ad