ராணிப்பேட்டை மாவட்டம், மேல்விஷாரம் தி நேஷனல் வெல்ஃபர் அசோசியேஷன் சார்பில், வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர். விக்ரம் மேத்யூஸ் அவர்களை சந்தித்து மேல்விஷாரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், வறுமை கோட்டிற்கு கீழ் வசிக்கும் மக்களுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளித்து, சிறப்பு சலுகை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
அதன் பிறகு ஆலோசனை செய்து, வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி மிஷன் நெட்வொர்க் ஆலோசகர்கள் ஆன் மிரியம் மற்றும் டாக்டர் விஜய் ஆனந்த் இஸ்மாவேல் எங்கள் அலுவலகத்திற்கு வருகை தந்து எங்களிடம் ஆலோசனை செய்தார்கள். மேலும், சேவைகளை பார்த்து இங்கே வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கின்ற மக்களுக்கு சி.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டார்கள்.
ஆகவே, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் சி.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சைக்கு செல்பவர்கள் மேல்விஷாரம் தி நேஷனல் வெல்ஃபர் அசோசியேஷன் அலுவலகத்தில் கடிதம் பெற்று கொண்டு சிறப்பான முறையில் சிகிச்சை பெற்று எங்களின் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர்.
- வடமேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.
No comments:
Post a Comment