வாலாஜாவில் பெண் குழந்தை பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு முன்னிட்டு விழிப்புணர்வு கூட்டம் ஆய்வாளர் சாலமோன் ராஜா பங்கேற்பு !!! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 9 February 2024

வாலாஜாவில் பெண் குழந்தை பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு முன்னிட்டு விழிப்புணர்வு கூட்டம் ஆய்வாளர் சாலமோன் ராஜா பங்கேற்பு !!!


வாலாஜாபேட்டை காவல் நிலையம் மற்றும் வாலாஜா ரோட்டரி சங்கம் சார்பில் வாலாஜா AAA பெண்கள் கல்லூரியில்  பெண் குழந்தை பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு முன்னிட்டு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.இதில் வாலாஜாபேட்டை காவல் நிலைய ஆய்வாளர்  சாலமோன் ராஜா மற்றும் ரோட்டரி சங்கத் தலைவர் கலந்து கொண்டு மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் தலை கவசத்தை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தொடர்ந்து பேசிய காவல் ஆய்வாளர் அவர்கள் பெண்கள் சமுதாயத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் நன்றாக படித்து தங்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் என்றும் தங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.இந்த நிகழ்ச்சியில்சாலை பாதுகாப்பு பற்றிய துண்டு பிரசுரங்களை  காவல் ஆய்வாளர் மற்றும்  உதவி ஆய்வாளர் மஹராஜன் மாணவிகளுக்கு வழங்கினார் இந்த நிகழ்ச்சியில்  AAA கல்லூரி  முதல்வர் பேராசிரியர்கள் மற்றும் ரோட்டரி சங்கத் தலைவர்கள் கலந்து கொண்டார்கள்.


- வடமேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.

No comments:

Post a Comment

Post Top Ad