ராணிப்பேட்டையில் பாமக கட்சியினர் ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 9 February 2024

ராணிப்பேட்டையில் பாமக கட்சியினர் ஆர்ப்பாட்டம்.


இராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் மற்றும் ரசாயன பொருட்கள் உற்பத்தியாகும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை பாலாற்றில் கலக்கும் தொழிற்சாலைகளையும் அதற்கு துணை போகும் மாசுகட்டுப்பாடு வாரியம் மற்றும் மாவட்ட நீர்வாகத்தையும் கண்டித்து முத்துக்கடை பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை கழக  பேச்சாளர் தின புரட்சி  ராஜேந்திரன் பேசினார் அதனை தொடர்ந்து  மாவட்டச் செயலாளர் சரவணன் கண்டன உரையாற்றினார் அவர் பேசுகையில் ராணிப்பேட்டை மாவட்டம் கருப்பு மாவட்டம்  தோல் பதணிடும் தொழிற்சாலைகள் மற்றும் ரசாயன தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை இரவு 10 மணியிலிருந்து விடியற்காலம் 4 மணி வரை திறந்து பாலாற்றில் விடுகின்றனர்.


இதனால் பாலாற்று நீருடன் ரசாயன நீரும் கலந்து குடிக்க தகுதியற்ற நீராய் மாறி இருக்கிறது தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை சுத்திகரிப்பதற்கு, சுத்திகரிப்பு நிலையம் உள்ளது இந்த சுத்திகரிப்பு நிலையத்திற்குறிய செலவினங்களில் 70% அரசாங்கமும், 30 சதவீதம் கம்பெனிகளும் ஏற்றுக் கொண்டுள்ளது.


சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள செடிகளுக்கு ஊற்ற வேண்டும்  ஆனால் இதில் எந்த வேலையும் நடைபெறவில்லை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கம்பெனி முதலாளிகளிடம் கமிஷன் பெற்றுக் கொண்டு இரவு நேரங்களில் திருட்டுத்தனமாக பாலாற்றில்  தண்ணீர்  திறந்து விட அனுமதித்து வருகின்றனர், இதனை மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என்றார்.


சிப்காட்டில் குவிந்துள்ள ஆபத்தான  குரோமிய கழிவுகளை அகற்றுவதற்கு இரண்டு வருடத்திற்கு முன்பாக  25 கோடி ரூபாய்  அரசு நிதி ஒதுக்கியது அதில் இரண்டு லாரி குரோமியம் மட்டுமே அகற்றப்பட்டது தற்போது சுற்றுச்சூழல் அமைச்சராக இருக்கிற மெய்ய நாதன்  குரோமிய கழிவுகளை அகற்றுவதற்கு 15 கோடிகள் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக கூறியிருக்கிறார் சென்ற முறை குரோமிய கழிவுகளை  அகற்றுவதற்கு ஒதுக்கிய 25 கோடி ரூபாய்  பணம் எங்கே? போனது என்று கேள்வி? எழுப்பினார். 


தொடர்ந்து பேசிய அவர் ராணிப்பேட்டையில் ஏற்கனவே  மாசுக்கட்டுப்பாட்டு வாரிய  அதிகாரியாய் இருந்த பன்னீர்செல்வம் என்பவரின் வீட்டில்  அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்ததில்  100 கோடி ரூபாய் பணத்தை  கைப்பற்றினர் கம்பெனி முதலாளிகளுக்கும் வட்டிக்கு பணம் கொடுத்து உதவி வந்திருக்கிறார் பன்னீர்செல்வம் என்பதும் தெரியவந்தது  தற்போதுள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி வீட்டில் ரெய்டு போனால் தான் எத்தனை கோடி ரூபாய் பணம்  இருக்கிறது என்று தெரியவரும்  இந்த செய்தியை கேட்டு  அவர் பணத்தை பாதுகாப்பு செய்திருப்பார் என்றார்.


நவலாக் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பெண் இருந்து வருகிறார் இவரை அந்த ஊராட்சியில் இருக்கும்  12 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் செயல்பட விடாமல் தடுத்து வருகின்றனர் துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பாமக தலைவர் அன்புமணி ராமதாசை அழைத்து வந்து மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.


பிஜேபி கட்சியின் தலைவர் அண்ணாமலை இரண்டு நாட்களுக்கு முன்பாக ராணிப்பேட்டைக்கு வந்து  முத்துக்கடை பேருந்து நிலையத்தில்  பேசிய போது அரசு  மதுக்கடைகளை மூடிவிட்டால் அதில் பணிபுரியும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று பேசிவிட்டு பிஜேபி ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகளை மூடுவோம்  என்று பிரச்சாரம் செய்கிறார் திமுகவில் படிக்காதவர்கள் எல்லாம் அமைச்சர்கள் ஆகிவிட்டார்கள் என்று கூறிவிட்டு ஐபிஎஸ் படித்த அண்ணாமலை  அதிமுக, திமுக பாணியில் அரசியல் நாடகம் ஆடுகிறார் இன்று குற்றம் சாட்டினார் 


பாமக கட்சி ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு, இலவசக் கல்வி, இலவச மருத்துவம், விவசாயிகளுக்கு இலவச உரம் மற்றும் டிராக்டர் என்ற நான்கு கொள்கைகளை செயல்படுத்துவோம் என்று இவ்வாறு அவர் பேசினார்  இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை மற்றும் மகளிர் அணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad