ராணிப்பேட்டை அடுத்த முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜாக்) சார்பில் கருப்பு பேட்ச் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 5 February 2024

ராணிப்பேட்டை அடுத்த முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜாக்) சார்பில் கருப்பு பேட்ச் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் பாலமுருகன் மற்றும் தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கூட்டணி மாநில துணைப் பொதுச் செயலாளர் ஸ்ரீதர் ஆகியோர் தலைமை வகித்திருந்தனர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக  தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் மாநில ஒருங்கிணைப்பாளர் சேகர் பங்கேற்று கண்டன உரையினை நிகழ்த்தினார்.


இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டதாவது, தொடக்க கல்வித்துறையில் பணிபுரியக்கூடிய 90% ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பினை பறிக்கக்கூடிய மாநில முன்னுரிமையை வலியுறுத்தும் 243 அரசாணையை ரத்து செய்ய வேண்டும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை கலைத்திட வேண்டும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பள்ளிக்கல்வித்துறையினர் டிட்டோ ஜாக் உயர்மட்ட குழுவினருடன் நடத்திய பேச்சு வார்த்தையில் ஏற்றுக்கொண்ட 12 அம்ச கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பேட்ச் அணிந்தபடி கண்டன  கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் வடமேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444 

No comments:

Post a Comment

Post Top Ad