நெமிலி அருகே கீழ்வீதி கிராமத்தில் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 5 February 2024

நெமிலி அருகே கீழ்வீதி கிராமத்தில் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்!


ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியம் கீழ்வீதி கிராம ஊராட்சி மேம்பாடு மற்றும் பாதுகப்பு வசதிகள் குறித்து பொது மக்கள் ஆலோசனை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர். ஆனந்தி செல்வம் தலைமையில், ஊராட்சி மன்ற துணை தலைவர். அர்ச்சனா கலையரசன் முன்னிலையில் நடைப்பெற்றது. 

இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர். சுந்தரம்மாள் பெருமாள், ஒன்றிய குழு உறுப்பினர். மணிமேகலை வெங்கடேசன் ஆகியோர் கலந்துக்கொண்டு பாதுகாப்பு வசதிகள் குறித்து பொது மக்களுடன் கலந்துரையாடினர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஏற்பாட்டில் புதிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ. 17 லட்ச மதிப்பீட்டில் மயான பாதை தார் சாலைக்கான பூமி பூஜையில் கலந்துக்கொண்டு புதிய தார் சாலைக்கான வேலைப்பாடுகளை தொடங்கிவைத்தார். 


இதில் நெமிலி மத்திய ஒன்றிய கழக செயலாளர் எஸ். ஜி. சி. பெருமாள், மாவட்ட பிரதிநிதி. சம்பத், நெமிலி காவலர் உதவி ஆய்வாளர். சிரஞ்சீவிலு, நெமிலி காவல் உதவி  ஆய்வாளர். லோகேஷ், கிராம நிர்வாக அலுவலர். மணிகண்டன், ஊராட்சி செயலாளர். வெங்கடேசன் கிராம பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். 


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா 

No comments:

Post a Comment

Post Top Ad