மத்திய அரசின் 10 ஆண்டு கால சாதனை திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்லும் வகையில் என் மண் என் மக்கள் என்ற பாத யாத்திரை இன்று, ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு தொகுதிக்குட்பட்ட ஆரணி - ஆற்காடு சாலையில் இருந்து பேருந்து நிலையம் வரை என் மண் என் மக்கள் என்ற பாத யாத்திரையை தமிழ்நாடு பாரதிய ஜனதாவின் மாநில தலைவர் அண்ணாமலை நடை பயணம் மேற்கொண்டார். அப்போது பாரதிய கட்சியின் மகளிர் அணி சார்பில் பூ மலர்கள் தூவி வரவேற்றனர். தொடர்ந்து நடை பயணத்தை மேற்கொண்ட அண்ணாமலைக்கு கட்சி தொண்டர்கள் வெள்ளத்தில் ஆரவாரத்தோடு நடை பயணம் செய்தார்.
பின்னர் பேருந்து நிலையத்தில் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இன்றைக்கு பாராளுமன்றத்தில் பாரத பிரதமர் பேசியபோது, 2014 காங்கிரஸ் கட்சி சொன்னது இந்தியாவின் மூன்றாவது பொருளாதார நாடக வருவதற்கு இன்னும் 30 ஆண்டுகள் தேவைப்படும் என ஆனால் பாரதிய ஜனதா 9 ஆண்டு கால ஆட்சியில் 5 வது பொருளாதார நாடக மாறி இருக்கிறது. மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்து 2028 ல் மூன்றாவது பொருளாதார நாடக மாறி இருக்கும் என பாரத பிரதமர் கூறியதாக தெரிவித்தார்.
பிரதமரின் கனவு மிகப்பெரியது இந்த நாட்டை வல்லரசாகவும், ஏழை இல்லாத நாடக மாற்ற வெண்டும் என கனவு காண்கின்றார். அதன்படி பாரதிய ஜனதா ஆட்சியில் பழங்குடியின சகோதரி பெண் திரௌபதி முர்மு குடியரசு தலைவராக அமர்த்தி அழகு பார்பதோடு 75 அமைச்சர்கள் உள்ள அமைச்சரவையில் 12 அமைச்சர்கள் பட்டியிலனத்தைச் சார்ந்தவர்கள் எனவும் எட்டு அமைச்சர்கள் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்கள் எனவும் இட ஒதுக்கீடு செய்துள்ளோம் ஆனால் திராவிட கழக ஆட்சியில் 35 அமைச்சர்களில் வெறும் மூன்று அமைச்சர்கள் மட்டுமே பட்டியல் இனத்தைச் சார்ந்தவர்கள் உள்ளனர் ஆகவே திமுக சமூகநீதி பற்றி பேசுவதற்கு தகுதியில்லை என விமர்சனம் செய்தார்.
மேலும் நாட்டு மக்கள் காங்கிரஸ் கட்சியினரையும் மற்றும் குடும்பம், சாதி, அடாவடி போன்ற அரசியல் செய்பவர்களை எதிர்கட்சியில் கூட அமர வைக்காமல் பார்வையாளர்கள் அமரும் இருக்கையில் அமர வைக்க மக்கள் தயாராகி விட்டனர் என பேசினார். தொடர்ந்து பேசிய அண்ணாமலை ஆற்காடு மிகவும் பழமை வாய்ந்த ஊர் எனவும் சோழர்கள், பல்லவர்கள், விஜயநகர் பேரரசு மற்றும் நவாப்பு ஆகிய காலத்தில் தொண்டை மண்டலத்தில் ஆற்காட்டிற்கே தனி பெயர் உண்டு என புகழாரம் சூட்டினார்.
நீண்ட நாள் கோரிக்கையான நகரி - திண்டிவனம் அகல ரயில் பாதைக்கு இந்த பட்ஜெட்டில் 350 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உள்ளதாகவும் விரைவில் அந்த பணிகள் முடிந்துவிடும் என நம்பிக்கை தெரிவித்தார். வருகின்ற 2024 பாராளுமன்றத் தேர்தல் நமது என தெரிவித்த அவர் 400 பாராளுமன்ற உறுப்பினர்களை தாண்டி வெற்றி பெற்று ஆட்சியில் அமர போகிறோம் எனவும் அரக்கோணம் தொகுதியில் யார் வேட்பாளராக நிறுத்தினாலும் அவரை மோடியாக எண்ணி வாக்களிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் இருதியில் மத்திய அரசின் சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. இந்தப் பாதயாத்திரியில் பாஜக மாவட்ட தலைவர் விஜயன், மாநில பொது செயலாளர் கார்தியாயினி உட்பட ஆயிரக்கணக்கான பாஜக நிர்வாகிகள் தொடர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துக் கொண்டனர்.
- வடமேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444..
No comments:
Post a Comment