மூளைசாவடைந்து உடல் உறுப்பு தானம் செய்தவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர் காந்தி. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 6 February 2024

மூளைசாவடைந்து உடல் உறுப்பு தானம் செய்தவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர் காந்தி.


சாலை விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்டு உயிரிழந்த ராணிப்பேட்டை மாவட்டம். வாலாஜா ஊராட்சி ஒன்றியம். தெங்கால் ஊராட்சி, அவரைக்கரை, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ருத்திரகோட்டி (வயது 42) என்பவரின் குடும்ப உறுப்பினர்களின் சம்மதத்துடன் உடல் உறுப்புகள் தானம் செய்தமைக்காக இறந்தவரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ராணிப்பேட்டை  ஆர்.காந்தி,   பின்னர் சொந்த தொகை ரூ.50 ஆயிரத்தினை இறந்த நபரின் 4 குழந்தைகளிடம் வழங்கினார், அவர்களின் கல்வி செலவுகளை தாமே ஏற்றுக் கொள்வதாக உறுதியளித்து ஆறுதல் கூறினார்கள். 

இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.வளர்மதி, வாலாஜா வட்டாட்சியர் வெங்கடேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் க.சுந்தரம், ஒன்றிய செயலாளர் எம்.சண்முகம், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எஸ்.வினோத், பத்மநாபன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் திமுகவினர் உடனிருந்தனர்.


- வடமேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444

No comments:

Post a Comment

Post Top Ad