நாட்டிலேயே முதல் முறையாக மருத்துவமனைகளில் தானியங்கி முறையில் பணம் செலுத்தி மருத்துவ வசதிகளை பெறும் வசதி. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 7 February 2024

நாட்டிலேயே முதல் முறையாக மருத்துவமனைகளில் தானியங்கி முறையில் பணம் செலுத்தி மருத்துவ வசதிகளை பெறும் வசதி.


நாட்டிலேயே முதல் முறையாக மருத்துவமனைகளில் தானியங்கி முறையில் பணம் செலுத்தி மருத்துவ வசதிகளை பெறும் வசதி சி.எம்.சி ராணிப்பேட்டை மருத்துவமனையில் அமைச்சர்கள் மெய்யநாதன் மற்றும் காந்தி துவங்கி வைத்தனர் - ராணிப்பேட்டையில் உள்ள குரோமியக்கழிவுகளை வெளியேறாத வகையில் தடுப்பதற்காக ரூ.15 கோடியில் முதற்கட்டமாக ஒரு திட்டத்தை செயல்படுத்தவுள்ளோம் தமிழக சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் பேட்டி.

ராணிப்பேட்டைமாவட்டம்,பூட்டுத்தாக்கில் உள்ள கிறிஸ்தவ மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மாஸ்டர் ஹெல்த் செக்கப் மற்றும் டிஜிட்டல் ஹெல்த் கியோஸ்க் ஆகியவைகள் துவக்க விழா மருத்துவ கல்லூரியின் இயக்குநர் விகர்ம் மேத்யூ தலைமையில் நடைபெற்றது இதில் ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும் கைத்தறி துணி நூல்துறை அமைச்சருமான காந்தி இதனை துவங்கி வைத்தார் இதில் தமிழக சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சர் மெய்யநாதன் குத்துவிளக்கேற்றி திட்டத்தினை துவங்கினார்.


இந்த விழாவில் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன் மருத்துவ கண்காணிப்பாளர் ராஜேஷ் மற்றும் துணை பொது கண்காணிப்பாளர் துரை ஜாஸ்பர் உள்ளிட்ட பல கலந்துகொண்டனர் கியோஸ்க்கின் மூலம் நோயாளிகள் பணம் செலுத்த காத்திருக்க வேண்டிய அவசியமில்லை தொடர்ந்து 24 மணி நேரம் பணம் செலுத்தி முன் பதிவுகளையும் செய்யலாம்.


பின்னர் செய்தியாளர்களிடம் தமிழக சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சர் மெய்யநாதன் செய்தியாளர்களிடம் கூறுகையில் சி.எம்.சி மருத்துவமனை ராணிப்பேட்டையில் மாஸ்டர் செக்கப் கட்டமைப்பை துவங்கியதற்கு அமைச்சர் காந்தி திறந்து வைத்தார் இதில் இயக்குநர் விக்ரம் மேத்யூஸ் ஆகியோரும் பங்கேற்றனர் பசுமை தமிழகம் திட்டம் மூலம் தமிழகத்தில் 33 சதவிகிதம் மரங்கள் அளவை உயர்த்த கடந்த ஆண்டு 2. 80 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளது 10 கோடி மரங்களை நட இலக்கை வைத்துள்ளோம் மரங்களை நட்டு வருகிறோம் குரோமியம் வேதி நிறுவனம் 1995 ஆம் ஆண்டு மூடப்பட்டது.


அதனை பாதுகாப்பாக அகற்ற நேரடியாக ஆய்வு செய்து குழு அமைக்கப்பட்டு மாசுக்கட்டுபாட்டு வாரியத்தை சுற்றுசூழல் நிதியை பெற்று அதனை எவ்வாறு கையாளவது என்ற வகையில் ரூ.15 கோடி முதற்கட்டமாக குரோமியம் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என கூறினார்.- வடமேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.

No comments:

Post a Comment

Post Top Ad