இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.வளர்மதி, நேற்று தொடங்கிய 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை மாணவ மாணவியர்கள் வாலாஜா தேர்வு மையங்களில் எழுதுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 1 March 2024

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.வளர்மதி, நேற்று தொடங்கிய 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை மாணவ மாணவியர்கள் வாலாஜா தேர்வு மையங்களில் எழுதுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.வளர்மதி,நேற்று தொடங்கிய 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை வாலாஜா ஒன்றியம், வன்னிவேடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, வாலாஜா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய தேர்வு மையங்களில் மாணவ மாணவியர்கள் தேர்வு எழுதுவதையும், மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள் உதவியாளர்கள் உதவியுடன் தேர்வு எழுதுவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அரசுத் தேர்வுத் துறை பொதுத் தேர்வு மார்ச் 2024 இராணிப்பேட்டை மாவட்டத்தில் 63 தேர்வு மையங்களில் அனைத்து அரசு/அரசு உதவிபெறும்/தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயிலும் 6881 மாணவிகளும், 5971 மாணவர்களும் என மொத்தம் 12852 நேற்று (01.03.2024) முதல் தேர்வு எழுதுகின்றனர்.


இதில் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள். துறை அலுவலர்கள் என தலைமையாசிரியர்கள் மற்றும் 131 முதுகலை ஆசிரியர்களும் தேர்வறைக் கண்காணிப்பாளர்களாக 890 ஆசிரியர்களும், நிலையான படை மற்றும் பறக்கும் படை உறுப்பினர்களாக 92 ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கென சொல்வதை எழுதுபவர் 129 நபர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


தேர்வு மையங்கள் அனைத்திற்கும் காவல்துறை கண்காணிப்பிற்காக காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் ஆயுதம் ஏந்திய காவலருடன் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்வு மையங்களுக்கு வினாத்தாள் எடுத்து செல்லும் வாகனங்களில் ஆயுதம் ஏந்திய காவலர் பாதுகாப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


தேர்வு மையங்களில் மாணவ மாணவியர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிவறை வசதி செய்யப்பட்டுள்ளது. மாணவ மாணவியர்கள் தேர்வெழுதுவதை கண்காணிக்க வருவாய் துறை அலுவலர்கள் பறக்கும் படையினராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாணவர்கள் அச்சமின்றி தேர்வெழுத அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் திருமதி.ச.வளர்மதி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள், இந்த ஆய்வினில் மாவட்ட கல்வி அலுவலர் திரு.மோகன் உடனிருந்தார். 

No comments:

Post a Comment

Post Top Ad