இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தேவிநகர் பாரதிதாசன் தெருவில் பல ஆண்டுகள் பாழடைந்த இருந்த இருந்த திருக்கோயிலை புதுப்பிக்க நேற்று சிறப்பு பூஜைகள், யாகங்கள் செய்து அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு 3வது வார்டு நகர மன்ற உறுப்பினர் ஆனந்தன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக ஆற்காடு நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
மேலும் இதில் மகாத்மா காந்தியை அறக்கட்டளை துணைத் தலைவர் எஸ்.ஆர்.பி. பென்ஸ்பாண்டியன்,கோவில் ஸ்தபதி தங்கராஜ் மற்றும் வார்டு பகுதியில் உள்ள பெரியோர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment