ராணிப்பேட்டை மாவட்ட திமுக கழகப் பொருளாளர் தலைமையில் முக ஸ்டாலின் 71 வது பிறந்தநாள் கொண்டாட்டம். - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 1 March 2024

ராணிப்பேட்டை மாவட்ட திமுக கழகப் பொருளாளர் தலைமையில் முக ஸ்டாலின் 71 வது பிறந்தநாள் கொண்டாட்டம்.


ராணிப்பேட்டை மாவட்டம் தமிழக முதல்வரும் திமுக கட்சியின் தலைவருமான மு க ஸ்டாலின் 71 வது பிறந்தநாள்  விழாவையொட்டி  ராணிப்பேட்டை  திமுக மாவட்ட பொருளாளர் ஆற்காடு  ஏவி சாரதி அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

அதனைத் தொடர்ந்து ஆற்காடு அடுத்த ரத்தினகிரி முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்து முதல்வரின் பேருக்கு அர்ச்சனை செய்தார் தொடர் நிகழ்வாக திருமுருகன் திருமண மண்டபத்தில் 1000திற்கும் மேற்பட்டோருக்கு அறுசுவையுடன் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, இந்த நிகழ்வின் போது ஒன்றிய செயலாளர் ஏ வி. நந்தகுமார், ஒன்றிய கவுன்சிலர் ஜி கே. மூர்த்தி, கவுன்சிலர் மாலா மகாலிங்கம், ஒன்றிய அவைத் தலைவர் தண்டபாணி, ஒன்றிய கவுன்சிலர் தீபிகா இளவழகன், ஆற்காடு நகர மன்ற உறுப்பினர் மக்சூர் அஹமத், மாவட்ட வழக்கறிஞர் அமைப்பாளர் எஸ் .கே. நந்தகுமார், ஆற்காடு 20 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் தட்சிணாமூர்த்தி, 14 வது வார்டு உறுப்பினர், எம் கண்ணன் 19வது வார்டு உறுப்பினர் பிடி.குணா, இயக்குனர் பைனான்ஸ் சரவணன், ஆடியோ பெருமாள், 20வது வார்டு உறுப்பினர் குகன் உள்ளிட்ட கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தினர்.

No comments:

Post a Comment

Post Top Ad