அரக்கோணம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட நவநீதகிருஷ்ணன் நேர்காணல் நிகழ்ச்சியில் பங்கேற்பு! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 10 March 2024

அரக்கோணம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட நவநீதகிருஷ்ணன் நேர்காணல் நிகழ்ச்சியில் பங்கேற்பு!


ராணிப்பேட்டை மாவட்டம் அதிமுக சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட 2475 பேர் விருப்பமனுக்களை பூர்த்தி செய்து வழங்கினர். அதிமுக சார்பில் தமிழகம் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் போட்டியிட விரும்புவோர் விருப்பமனு அளிக்க, விருப்பமனு விநியோகம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் கடந்த பிப்ரவரி 21ம் தேதி தொடங்கியது. 

விருப்பமனுக்களை பொது தொகுதியில் போட்டியிட விரும்புவோர் ரூ.20000, தனித்தொகுதியில் போட்டியிட விரும்புவோர் ரூ. 15,000 கட்டணத் தொகையை செலுத்தி வாங்கினர். விருப்பமனுக்கள் விநியோகம் கடந்த மார்ச் 1- ஆம் தேதியுடன் நிறைவடைய இருந்த நிலையில் 8 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. 8 ஆம் தேதி மாலை 5 மணியுடன் விருப்பமனுக்களை பூர்த்தி செய்து திரும்ப வழங்குவதற்கான அவகாசம் நிறைவடைந்தது. அதன்படி மொத்தம் 2400 பேர் விருப்பமனுக்களை பூர்த்தி செய்து அளித்துள்ளனர். 


இந்த விருப்பமனுக்கள் அடிப்படையில் மாவட்ட செயலாளர்களுடன் கட்சியின் பொதுச்செயலாளர். பழனிசாமி கலந்தாலோசித்து வேட்பாளர் அறிவிக்க இருந்த நிலையில் அரக்கோணம் தொகுதிக்கு முன்னாள் சோளிங்கர் எம்.எல்.ஏ. சம்பத் உட்பட 46 பேர் மனுதாக்கல் செய்தனர். இந்த நிலையில் நேற்று 9 ,10 ஆகிய தேதிகளில் வேட்பாளர் நேர்காணல் நடைபெற்றது. இதில் அரக்கோணம் தொகுதியில் போட்டியிட நெமிலி நகர பொருளாளர். நவநீதகிருஷ்ணன் விருப்பமனு அளித்திருந்தார். 


இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும், அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினருமான சு. ரவி எம்.எல்.ஏ அவர்களுடன் நெமிலி நகர பொருளாளர். நவநீதகிருஷ்ணன் நேர்காணல் கலந்து கொண்டார். இதில் மாணவர் அணி செயலாளர். முருகன், கவுன்சிலர். சங்கர், சுகுமார், பரந்தாமன் ஆகியோர் உடன் இருந்தனர்.


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.

No comments:

Post a Comment

Post Top Ad