தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர், அருள்மிகு லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயிலில் ரூ.20.30 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கம்பிவட ஊர்தி சேவை மற்றும் பக்தர்களின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பக்தர்களின் பயன்பாட்டிற்காக காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்த நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நேரலையில் கலந்து கொண்டார்.
இதில் மாவட்ட கலெக்டர் ச.வளர்மதி,அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன், சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.முனிரத்தினம், ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன், உபயதாரர்கள் நரசிம்மராஜு, டாக்டர்.ஜெ.சந்தீப்ஆனந்த், டாக்டர். ரவிச்சந்தர்,ரங்காராஜு, இணை ஆணையாளர் ஆ.அருணாச்சலம், உதவி ஆணையாளர் ஜெயா மற்றும் பலர் உடனிருந்தனர்.
வடமேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.
No comments:
Post a Comment