ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி.D.V.கிரண் ஸ்ருதி, இ.கா.ப., தலைமையில் நடைபெற்றது. இக்குற்ற ஆய்வு கூட்டத்தில் கடந்த மாதம் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக காவல் ஆய்வாளர்கள் திரு.சாலமன் ராஜா (ஆற்காடு கிராமிய வட்ட காவல் நிலையம்), திரு.பழனிவேல் (அரக்கோணம் கிராமிய வட்ட காவல் ஆய்வாளர்), உதவி ஆய்வாளர்கள் திரு.மகாராஜன் (வாலாஜா காவல் நிலையம்), திரு.யுவராஜ் (பானாவரம் காவல் நிலையம்), திருமதி.தமிழ்செல்வி (ஆற்காடு நகர காவல் நிலையம்), தலைமை காவலர் திரு.செந்தில்குமார் (இராணிப்பேட்டை காவல் நிலையம்), முதல்நிலை காவலர்கள் திரு. ஹரிஷ் (வாலாஜா காவல் நிலையம்), திரு.ராஜேஷ் (அரக்கோணம் நகர காவல் நிலையம்), திரு.சிலம்பரசன் (திமிரி காவல் நிலையம்), திருமதி.ஜெயந்தி (இராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையம்), இரண்டாம் நிலை காவலர் திரு.ஏழுமலை (அரக்கோணம் நகர காவல் நிலையம்) ஆகியோரை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சான்றிதழ்களை வழங்கினார்கள்.
வடமேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.
No comments:
Post a Comment