மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி D.V கிரண் ஸ்ருதி இ.கா.ப.,அவர்களின் உத்தரவின் பேரில் இராணிப்பேட்டை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் உதவி ஆய்வாளர் திரு.பிரபாகரன் அவர்கள் தலைமையில் வாலாஜவில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் சுமார் 750 மாணவிகளுக்கு போதைப் பொருள் தடுப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி ஏற்படுத்தி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழச்சியில் மாணவிகளுக்கு போதைப் பொருள் தடுப்பது குறித்த விழிப்புணர்வும், போதைப்பொருள் குறித்த புகார்களுக்கு இலவச உதவி எண்-10581 பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது, மேலும் இந்நிகழ்ச்சியில் கண்காணிப்பாளர் மாவட்ட தலைமை டாக்டர்.உஷா நந்தினி, கல்லூரி முதல்வர் திரு.சீனிவாசன், இராணிப்பேட்டை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினர், கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- வடமேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.
No comments:
Post a Comment