ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலம் பேரூராட்சி அதிமுக சார்பில் அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான. எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கினங்க விடியா திமுக அரசு பதவியேற்ற நாளில் இருந்து சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக சீர்கேடு அடைந்துள்ளதோடு; தமிழகம் போதைப் பொருட்களின் தலைநகரமாக மாறி, வருங்காலத் தலைமுறையினரின் எதிர்காலம் சீரழிந்து வருவதற்கும் போதைப் பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழ் நாட்டிற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளதற்கும் காரணமான விடியா திமுக அரசைக் கண்டித்தும், போதைப் பொருள் பழக்கத்தை உடனடியாக கட்டுப்படுத்த வலியுறுத்தியும் தக்கோலம் பேரூராட்சி அதிமுக சார்பில் தக்கோலத்தில் ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக செயலாளரும், அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினருமான சு.ரவி எம்.எல்.ஏ தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் சோளிங்கர் முன்னாள் எம்.எல்.ஏ சம்பத், ஒன்றிய செயலாளர்கள். விஜயன், பிரகாஷ், பழனி, அரக்கோணம் நகர செயலாளர். பாண்டுரங்கன், மாநில வர்த்தக அணி துணை செயலாளர். மான்மல், மாவட்ட துணை செயலாளர். தயாளன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர். பாலு , மாவட்ட மாணவர் அணி செயலாளர். முருகன், கவுன்சிலர்கள். பாபு, சரவணன், நகர, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா
No comments:
Post a Comment