போதை கலாச்சாரத்தை தடுக்க திமுக அரசு தவறிவிட்டது, பள்ளி கல்லூரி மாணவர்கள் சீரழிகிறார்கள், அமமுக கழக அவைத் தலைவர் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் குற்றச்சாட்டு. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 11 March 2024

போதை கலாச்சாரத்தை தடுக்க திமுக அரசு தவறிவிட்டது, பள்ளி கல்லூரி மாணவர்கள் சீரழிகிறார்கள், அமமுக கழக அவைத் தலைவர் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் குற்றச்சாட்டு.


ராணிப்பேட்டை மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில்  தி.மு.க அரசை கண்டித்து ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அமைத்தலைவர் கே.பாண்டுரங்கன் தலைமை தாங்கினார், நகர செயலாளர் தனசேகரன் அனைவரையும் வரவேற்றார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கழக அவைத் தலைவருமான சி.கோபால் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும் கழக தேர்தல் பிரிவு செயலாளருமான என்.ஜி. பார்த்திபன் கண்டன உரையாற்றினர்.

அவர்கள் பேசுகையில்   திமுகவினர் மக்களிடம் கூப்பாடு போட்டு நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நல்லாட்சி தருகிறோம் இந்தத் திட்டம், அந்த திட்டம் நிறைவேற்றி தருகிறோம் என்று பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சி பிடிக்கின்றனர் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு மக்கள் அவதிப்படுகின்றனர் திமுகவில் கீழ் நிலையிலிருந்து மேல்நிலை பொறுப்பாளர் வரைக்கும் கூட்டுக் கொள்ளை அடித்து வருகின்றனர்.

ராணிப்பேட்டை நகராட்சியில் பணிபுரியும் பொறியாளர் ஆர்ப்பாட்டம் செய்யும் இடத்தை தூய்மைப்படுத்தி தர  சொன்னால்  அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்வதால் நாங்கள் அதை செய்து தர மாட்டோம் என்று மறுக்கிறார்  தூய்மை பணி செய்வது என்பது அனைத்து மக்களுக்கும், கட்சிகளுக்கும் செய்து தர வேண்டும்.


அதில் பாகுபாடு கூடாது என்றார் சோளிங்கர் நகராட்சிக்குட்பட்ட பஜார் வீதியில்  தரமற்ற முறையில் சிமெண்ட் சாலை அமைத்து திமுகவினர் கூட்டுக் கொள்ளை அடித்திருக்கிறார்கள் இந்த சாலையை ஆய்வு செய்து சரி செய்து தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்  திமுகவினர் எங்கெல்லாம் சொத்துக்கள், நிறுவனங்கள் வைத்து நடத்துகிறார்களோ!


அங்கெல்லாம் சிமெண்ட் சாலை, தார் சாலையை அமைத்து ஊர் பகுதியை அழகு படுத்துகிறோம் என்கிறார்கள்    முக்கியமான செய்தி என்னவென்றால்  தமிழகம் முழுவதும் போதை கலாச்சாரம் பெருகெடுத்து வருகிறது கடந்த பத்து நாட்களுக்கு முன்பு டெல்லியில் போதை தடுப்பு பிரிவு போலீசாரிடம் மூன்று தமிழர்கள் சிக்கி இருக்கின்றனர் 


அவர்கள் கொடுத்த வாக்குமூலம் அடிப்படையில் 2000 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் கடத்தலில் திமுக கழகத்துடன் மிக நெருங்கிய உறவில் இருக்கும்  ஜாபர் சாதிக் என்பவர் சிக்கி இருக்கின்றார்  தமிழகம் முழுவதும் கஞ்சா ,போதைப் பொருட்கள் விற்பனை   காட்டன் சூதாட்டம் பெருகி பள்ளி, கல்லூரி மாணவர்கள் சீரழிந்து வருகிறார்கள்.


தமிழகமே  போதை கலாச்சாரமாக மாறி இருக்கிறது இது போன்ற தொழில் செய்கிறவர்களை போலீசார் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தால்  திமுகவைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் அதனைத் தடுத்து நிறுத்தி  தொழில் செய்பவர்களிடம் நிதி  உதவி பெற்ற வருகின்றனர்   மக்களுக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கும் தேர்வாணைய கழகத்திற்கு தலைவரை நியமனம் செய்வதில் திமுக அரசு தவறி இருக்கிறது என்று குற்றம் சாட்டினார்.


இரண்டரை ஆண்டு ஆட்சி சாதனைகளை விளக்கிக் கொண்டிருக்கிற திமுக அரசு இளைஞர்கள், பள்ளி  மாணவர்கள் போதை கலாச்சாரத்தால் சீரழிந்து வருகிறார்கள் கஞ்சா,குட்கா, போதை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க தவறிவிட்டது எனவே தமிழக அரசு  நடவடிக்கை எடுத்து  போதைப் பொருள் விற்பனை செய்வதை தடுத்து நிறுத்தி  கட்டுக்குள் கொண்டு வர  நடவடிக்கை எடுக்க வேண்டும்


மேலும் அம்மா மக்கள் முன்னேற்றக்  கழகத்தைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் போதை கலாச்சாரத்தை தடுத்து நிறுத்த உதவியாய் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளைக் கழகப் பொறுப்பாளர்கள், பிற அணி பொறுப்பாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad