இந்நிகழ்விற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.வளர்மதி, அவர்கள் தலைமை வகித்தார்கள். ராணிப்பேட்டை நகராட்சி, முத்துக்கடை பேருந்து நிறுத்தத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசின் சாதனை விளக்கப்புகைப்படக் கண்காட்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்றது முதல் இரண்டரை ஆண்டுகளில் அரசுத் துறைகளின் சார்பில் புதியதாக தொடங்கி வைக்கப்பட்ட திட்டப் பணிகள் மற்றும் பொதுமக்களுக்கு செயல்படுத்தியுள்ள பல்வேறு நலத் திட்டங்கள் குறித்தும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் அவர்களால் பல்வேறு அரசுத் துறைகளின் சார்பாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள நலத்திட்டங்கள் மற்றும் துவக்கி வைத்த திட்டப் பணிகள் குறித்தும் பொதுமக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் பல்வேறு புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இப்புகைப்படக் கண்காட்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பல்துறை பணிவிளக்கக் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இப்புகைப்படக் கண்காட்சியானது இன்று முதல் தொடர்ந்து 7 நாட்கள் காலை 11.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை நடைபெறும். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, நகர மன்றத்தலைவர்கள் சுஜாதா வினோத், ஹரிணிதில்லை, ஒன்றியக் குழுத்தலைவர் சே.வெங்கட்ரமணன், நகரமன்றத் துணைத்தலைவர் ரமேஷ் கர்ணா, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வசந்தி ஆனந்தன், துணை இயக்குநர் வேளாண் விற்பனை வணிகம் சீனிராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செ.அசோக், உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் ஆர்ஜேசுரேஷ் விளம்பரம் மற்றும் செய்திகளுக்கு 9150223444.
No comments:
Post a Comment