ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டம், பனப்பாக்கம் பேரூர் கழக அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து பனப்பாக்கம் நகர செயலாளர் கே. எஸ். மணிவண்ணன் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட துணை செயலாளர். தயாளன், நெமிலி மேற்கு ஒன்றிய செயலாளர். அருணாபதி முன்னிலையில், அவைத்தலைவர். பழனியாண்டி வரவேற்புரை வழங்கினார்.
- திமுக அரசே! திமுக அரசே! துணை போகாதே! துணை போகாதே! குற்ற செயல்களில் ஈடுபவர்களுக்கு துணை போகாதே!
- சீரழியது! சீரழியது! கொலை கொள்ளை போதை பொருட்கள் வழிப்பறி உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கேட்டால் தமிழ்நாடு சீரழியுது!
- காப்பாற்றுவோம்! காப்பாற்றுவோம் !கஞ்சா மற்றும் போதை பொருள் பிடியிலிருந்து கல்லூரி மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்களை காப்பாற்றுவோம்!
- கஞ்சா மற்றும் போதைப்பொருள் பிடியிலிருந்து தமிழக இளைஞர்களை காப்பாற்றுவோம்!
- மாறிப்போச்சு! மாறிப்போச்சு! போதைப்பொருள் மாநிலமாக தமிழ்நாடு மாறிப்போச்சு! என கையில் பதாதைகளை ஏந்தி கோஷமிட்டவாரு மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் பாலசுந்தரம், முனுசாமி, கருணா, கோகிலா எம்.சி, அம்மா இளைஞர் பாசறை செயலாளர். சுகுமார், முன்னாள் கவுன்சிலர். சாந்தி வாசுதேவன், வட்ட செயலாளர்கள். பலராமன், கோபி, சூரியன், பிரகாசம் மற்றும் கழக நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா
No comments:
Post a Comment