நெமிலி பேருந்து நிலையத்தில் திமுக அரசை கண்டித்து பொருளாளர். நவநீதகிருஷ்ணன் முன்னிலையில் மனித சங்கிலி போராட்டம்! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 12 March 2024

நெமிலி பேருந்து நிலையத்தில் திமுக அரசை கண்டித்து பொருளாளர். நவநீதகிருஷ்ணன் முன்னிலையில் மனித சங்கிலி போராட்டம்!


ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேருந்து நிலையத்தில் திமுக அரசை கண்டித்து நகர செயலாளர். செல்வம் தலைமையில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. நெமிலி நகர பொருளாளர். நவநீதகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். 

  1. உழைப்போம்! உழைப்போம்! தமிழகத்தில் போதை பொருள் பழக்கத்தை ஒழிப்போம்!
  2. சீரழிக்காதே! சீரழிக்காதே! இளைஞர்களை சீரழிக்காதே!
  3. காப்போம்! காப்போம்! ஜனநாயகத்தை காப்போம்!
  4. காப்பாற்றுவோம்! காப்பாற்றுவோம்! கஞ்சா மற்றும் போதை பொருள் பிடியிலிருந்து கல்லூரி மாணவர்களை காப்பாற்றுவோம்!
  5. கிடைக்குது! கிடைக்குது! விடியா திமுக ஆட்சியிலே மூலை முடுக்கெல்லாம் கஞ்சா கிடைக்குது, விதவிதமாய் போதைப்பொருள் கிடைக்குது என கையில் பதாதைகளை ஏந்தி கோஷமிட்டவாறு மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதில் மாவட்ட பாசறை செயலாளர். அன்பரசு, மாவட்ட விவசாய அணி செயலாளர். திருமலை, அவைத்தலைவர். சத்தியமூர்த்தி, கீழ்விதி முன்னாள் கவுன்சிலர். ஆறுமுகம், எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட இணை செயலாளர். ரூப சந்திரன், மாணவர் அணி செயலாளர். முருகன், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர். டோமேஷ், கழக நிர்வாகிகள். வினோத், கணேஷ், நாகராஜன், பரந்தாமன், சுகுமார் மற்றும் மகளிர் அணி சார்ந்த நிர்வாகிகள் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா 

No comments:

Post a Comment

Post Top Ad