ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் திமுக அரசை கண்டித்து ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும், அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினருமான சு.ரவி எம்.எல்.ஏ தலைமையில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
- கேள்விக்குறியாச்சு! கேள்விக்குறியாச்சு! விடியா திமுக ஆட்சியில் வாக்களித்த மக்களின் வாழ்க்கையோ கேள்விக்குறியாச்சு!
- ஒழிப்போம்! ஒழிப்போம்! விடியா திமுக அரசின் அராஜகங்களை ஒழிப்போம்!
- காப்பாற்றுவோம்! காப்பாற்றுவோம்! கஞ்சா மற்றும் போதை பொருள் பிடியிலிருந்து பள்ளி மாணவர்களை காப்பாற்றுவோம்!
- போராட்டம்! இது போராட்டம்! இளைஞர்கள் மாணாக்கர்கள் பெண்கள் நலனை முன்னிறுத்தும் மனித சங்கிலி போராட்டம்!
- மாறிப்போச்சு! மாறிப்போச்சு! போதைப்பொருள் மாநிலமாக தமிழ்நாடு மாறிப்போச்சு! என கையில் பதாதைகளை ஏந்தி 500க்கும் மேற்பட்டோர் கோஷமிட்டவாரு மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் சோளிங்கர் ஒன்றிய செயலாளர். விஜயன், சோளிங்கர் முன்னாள் எம்.எல்.ஏ. சம்பத், அரக்கோணம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜி. பழனி, அரக்கோணம் கிழக்கு ஒன்றிய செயலாளர். பிரகாஷ், மேற்கு ஒன்றிய செயலாளர். நாகராஜன், அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் ஜி. அமுல்ராஜ் தண்டலம், எம்.ஜி.ஆர் நகர மன்ற செயலாளர். சுப்பிரமணி, விவசாய அணி ஒன்றிய செயலாளர். தீனதயாளன், மாவட்ட பொறுப்பாளர்கள். பாபு, பார்த்தசாரதி, வழக்கறிஞர். சிவலிங்கம், செல்வமந்தை, நெமிலி ஒன்றிய செயலாளர் ஏ. ஜி. விஜயன், அசமந்தூர் ஊராட்சி மன்ற தலைவர். துர்காசலம் மற்றும் கழக நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா
No comments:
Post a Comment