கிழக்கு ஒன்றிய செயலாளர் பூண்டி பிரகாசம் மற்றும் கிழக்கு ஒன்றிய அவை தலைவர் தேவராஜ் , மேற்கு ஒன்றிய செயலாளர் v.k.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் S.M. சுகுமார் கலந்துகொண்டு மனித சங்கிலி போராட்டத்தை தொடங்கி வைத்தார்.
முன்னாள் மாவட்ட கழக செயலாளர் சுமைதாங்கி ஏழுமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அவர் பேசியபோது தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிற திமுக ஆட்சியில் கஞ்சா குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனை அதிகமாகி வருகிறது இதனால் பள்ளி கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போதை கலாச்சாரத்திற்கு அடிமையாகி வருகின்றனர் தமிழகமே போதை மயமாகி வருகிறது. போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க தவறிய தமிழக முதல்வர் உடனடியாக பதவி விலக வேண்டும். என்று பல்வேறு கருத்துகளை வலியுறுத்தி பேசினார்.
இந்த ஆர்பாட்டத்தின்போது மாவட்ட துணை செயலாளர் வேதகிரி, W.G. முரளி, ஆறுமுகம், சுரேஷ், கஜேந்திரன், நாராயணன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் எழிலரசன், நகரத் தொழில்நுட்ப பிரிவு பரத், நகர மாணவரணி செயலாளர் டான் மேத்தா உள்ளிட்ட மாவட்ட நகர ஒன்றிய கிளை பொறுப்பாளர்கள் பிற அணியை சேர்ந்த பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment