நெமிலி ஊராட்சி ஒன்றியம் மகேந்திரவாடி ஆதி திராவிடர் பகுதிக்கு நகரும் நியாய விலை கடை திறப்பு விழா ஊராட்சி மன்ற தலைவர் பி. பரணிகுமார் தலைமையில், நெமிலி மத்திய ஒன்றிய திமுக கழக துணை செயலாளர் சரளா முரளி முன்னிலையில் நெமிலி ஒன்றிய பொருளாளர் பி.செல்வம் வரவேற்ப்பில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர். சுந்தரம்மாள் பெருமாள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார். இதில் திமுகவின் நெமிலி மத்திய ஒன்றிய செயலாளர் எஸ்.ஜி.சி.பெருமாள், நெமிலி மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.பி.ரவீந்திரன், நெமிலி மத்திய ஒன்றிய துணை செயலாளர். சீனிவாசன், மாவட்ட பிரதிநிதி. சம்பத், நெமிலி மத்திய ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர். ஸ்டாலின், கிளை செயலாளர். உதயகுமார், நெமிலி மத்திய ஒன்றிய சுற்று சூழல் அணி அமைப்பாளர். முரளிமுகேஷ் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா
No comments:
Post a Comment