ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு சார்பில் அரக்கோணத்தில் இஃப்தார் நோன்பு நிகழ்ச்சி அரசு மருத்துவமனை எதிரில் தி டவுன் ஹால் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக செயலாளரும், அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினருமான சு. ரவி எம்.எல்.ஏ இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இதில் சோளிங்கர் முன்னால் எம்.எல்.ஏ சம்பத், சோளிங்கர் ஒன்றிய செயலாளர். விஜயன், அரக்கோணம் கிழக்கு ஒன்றிய செயலாளர். பிரகாஷ், அரக்கோணம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜி. பழனி, அம்மா பேரவை ஒன்றிய செயலாளர். அமுல்ராஜ், எம்.ஜி.ஆர் நகர மன்ற செயலாளர். சுப்பிரமணி, விவசாய அணி ஒன்றிய செயலாளர். தீனதயாளன், பாண்டுரங்கன், மற்றும் அசமந்தூர் துர்காசலம் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா
No comments:
Post a Comment