கோவிந்தச்சேரி குப்பத்தைச் சேர்ந்த தாய் -மகன் வாலாஜா காவல் நிலையத்தில் புகார் மனு. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 18 March 2024

கோவிந்தச்சேரி குப்பத்தைச் சேர்ந்த தாய் -மகன் வாலாஜா காவல் நிலையத்தில் புகார் மனு.


ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த கோவிந்த சேரி குப்பம் புதிய காலனியைச் சேர்ந்தவர் கே ராஜேஷ் வயது 33 இவர் நேற்று தன்னுடைய தாயார் ஜோதியுடன் வந்து வாலாஜா காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார் அந்த மனுவில் எங்கள் கிராமத்தைச் சேர்ந்த மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் மேகநாதன் என்பவரின் மகன்கள் ஜெகதீஷ், தன்ராஜ், பாண்டியன் என்கிற ராமசாமி ஆகியோர்  கடந்த உள்ளாட்சித் தேர்தலில் எங்கள் பகுதியில் மூவரில் ஒருவரான ஜெகதீஷ் வார்டு உறுப்பினராக  போட்டியிட வேட்பு மனு  தாக்கல் செய்தார்.

நானும் அதே வார்டில் ஊராட்சி மன்ற உறுப்பினராக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தேன். ஜெகதீசன் அவருடைய தம்பிகளும் என்னிடம் வந்து வேட்பு மனுவை வாபஸ் பெற வற்புறுத்தினர் அதனை மறுத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன்  இதனால் என் மீது மேற்கண்ட மூவருக்கும் கோபமும் எரிச்சலும் பழிவாங்குதல் எண்ணமும் அதிகரித்தது 


காரணம் இல்லாமல் தினம் தினம் என்னை பகைத்து சண்டை வலித்து வந்தனர் குறிப்பாக   கடந்த 2022, 2023, 2024, ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தினத்தன்று வேண்டுமென்றே சண்டையை வலித்து அடித்தனர்  நானும் வேலையை குடும்பத்தை விட்டு போலீஸ் ஸ்டேஷன் சுற்றிக் கொண்டு திரிய முடியாது என்று அமைதியாக விட்டு விட்டேன்.


தொடர்ந்து வேண்டுமென்றே சண்டை வலிப்பது அவதூறாக பேசுவது அசிங்கமாக திட்டுவது போன்ற பல காரியங்களை செய்து வந்தனர் இந்த நிலையில் நேற்று 17.3.2004 அன்று மாலை சுமார் நான்கு  மணி அளவில்  எங்கள் கிராமத்தில் உள்ள கடைக்குச் சென்று மளிகை பொருட்களை வாங்கி வர சென்று கொண்டிருந்தபோது பாண்டியன் என்கிற ராமசாமி என்பவர் நேர் எதிரே  வந்து மடக்கி அசிங்கமாகவும், அவதூறவாகவும் பேசினார்


இதனைப் பார்த்த என்னுடைய தாய் ஜோதி அம்மாள்  வந்து தடுத்தபோது அவர் மீது கையை வைத்து தள்ளி விட்டார் அதனைத் தொடர்ந்து பாண்டியனின் அண்ணன்கள் ஜெகதீஷ் மற்றும் தனராஜ் ஓடி வந்து எங்களை தள்ளி விட்டு போன எலக்சன் நடக்கும்போதே உன்னை அடித்து கொலை செய்திருப்போம் உன்னை விட்டு வைத்தது தப்பா போய்விட்டது இந்த முறை உன்னை ஓழித்து விடுவோம் என்று மிரட்டினர்


எங்கள் கிராமத்தில் எனக்கு  யாரும் இல்லை என் உடன் பிறந்த அண்ணனும் பணப்பாக்கத்தில் வசித்து வருகிறார் மேற்கண்ட மூவரால் என் உயிருக்கும் உடைமைக்கும் ஆபத்து உள்ளது எனவே இவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்வதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

Post Top Ad