நெமிலியில் அதிமுக ஆட்சியின் சாதனைகளை பட்டியலிட்டு வீடு வீடாக துண்டு பிரச்சாரம் விநியோகம்! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 18 March 2024

நெமிலியில் அதிமுக ஆட்சியின் சாதனைகளை பட்டியலிட்டு வீடு வீடாக துண்டு பிரச்சாரம் விநியோகம்!

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேரூர் கழக அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர். எடப்பாடி பழனிச்சாமியின் நான்கரை ஆண்டு அதிமுக ஆட்சியின் சாதனைகளை விளக்கி நெமிலியில் கடைகள் மற்றும் வீடு வீடாக சென்று 53 நலத்திட்டங்கள் உள்ளடக்கிய துண்டு பிரசுரம் நகர செயலாளர். செல்வம் வழங்கினார் தமிழ்நாட்டில் 40 ஆண்டுகளில் நிறைவேற்ற முடியாத திட்டங்களை நான்கரை ஆண்டுகளில் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு செய்த சாதனைகள்:

  1. மிகப்பெரிய மாவட்டமாக இருந்த வேலூர் மாவட்டத்தை மூன்று மாவட்டமாக திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை என பிரித்து புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது.
  2. ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு 110 கோடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடம் கட்டிக் கொடுத்தது.
  3. ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலக கட்டிடம் கட்டிக் கொடுக்கப்பட்டது.
  4. அரக்கோணம் நகரில் புதிய கோட்டாட்சியர் அலுவலகம் துவங்கி அதற்கு 2.45 கோடியில் கட்டிடம் கட்டிக் கொடுக்கப்பட்டது.
  5. சோளிங்கர் புதிய வட்டாட்சியர் அலுவலகம் துவங்கி அதற்கு 2.45 கோடியில் கட்டிடம் கட்டிக் கொடுக்கப்பட்டது.
  6. கலவையில் புதிய வட்டாட்சியர் அலுவலகம் துவங்கி அதற்கு 2.45 கோடியில் கட்டிடம் கட்டிக் கொடுக்கப்பட்டது.
  7. சோளிங்கர் நகரில் அரசு கலைக்கல்லூரி துவங்கி அதற்கு 11 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.
  8. கன்னியாகுமரி- திருப்பதி கனரக வழித்தட சாலையில் நிலுவையில் இருந்த காஞ்சிபுரம்- அரக்கோணம் , திருத்தணி வரை சாலை அமைக்க ரூ. 320 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணி நடைபெற்று வருகிறது.
  9. ரூபாய் 41 கோடியில் செம்போடு ஊராட்சி, குருவராஜபேட்டை வரை கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்தது  மற்றும் தமிழகத்திற்கு செய்த சாதனைகள்;
  10. காவிரி நீர் மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஏரி குளங்கள் அமைத்து 50 ஆண்டுகால பிரச்சனைக்கு தீர்வு.
  11. குடிமராமத்து திட்டத்தின் மூலம் ரூ. 1832 கோடி செலவில் 5586 நீர்நிலைகள் தூர்வாரி சீரமைக்கப்பட்டன.
  12. காவிரி டெல்டா பகுதிகளில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிகபட்ச குருவை நெல் சாகுபடி 2010-11 இல் அதிக அளவில் 32.41 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
  13. பயிர்க்காப்பீட்டு திட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ. 9287 கோடி இழப்பீடுத் தொகை.
  14. உள்ளாட்சி அமைப்புகளில் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு அதிகாரம் அளிக்க 50% இட ஒதுக்கீடு.
  15. பெண் அரசு ஊழியர் பேறுகால விடுப்பு 90 நாட்களில் இருந்து 270 நாட்களாக உயர்வு.
  16. ஏழை எளிய மக்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே மருத்துவ வசதி அளிக்க 2000 அம்மா மினி கிளினிக்குகள் துவங்கப்பட்டுள்ளன. 
  17. 8.3.38 லட்சம் நெசவாளர்களுக்கு விலையில்லா மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
  18. தமிழ்நாடு முழுவதும் குறைந்த விலையில் தரமான உணவு வழங்கும் 654 அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. 
  19. அரசு பள்ளி மாணவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளில் 59.77 லட்சம் விலையில்லா மிதிவண்டிகள் ரூபாய் 2199 கோடி செலவில் வழங்கப்பட்டுள்ளது‌ 


என பட்டியலிட்டு நகர செயலாளர். செல்வம் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் வழங்கினார். இதில் மாணவர் அணி செயலாளர். முருகன், கவுன்சிலர். கணேசன், வட்ட செயலாளர். ஜெனா, மேலவை பிரதிநிதி. சுந்தரமூர்த்தி, வினோத், தினேஷ், செல்வம், அசநெல்லிகுப்பம் அசோக் ஆகியோர் உடன் இருந்தனர்.


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா

No comments:

Post a Comment

Post Top Ad