வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் நோயாளியிடம் திருடிய தாலிசரடு மற்றும் பைக் திருடன் கைது !!! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 19 March 2024

வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் நோயாளியிடம் திருடிய தாலிசரடு மற்றும் பைக் திருடன் கைது !!!


வாலாஜாபேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையிடம் கடந்த 13.03.2024 ம் தேதி இரவு 1.00 மணிக்கு ஆற்காடு அமீன்  தர்கா தெருவை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மனைவி விமலா வயது 40 என்பவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் வாலாஜா அரசு மருத்துவமனை ICU  பிரிவில் சிகிச்சைக்காக  அனுமதித்து சிகிச்சை செய்து வந்தபோது தனது கழுத்தில் அணிந்திருந்து இருந்த தாலி சரடு சுமார் 4 கிராம் பொன் நகையை காணவில்லை என கொடுத்த புகார் மனு மீது விசாரணை செய்து வந்த நிலையில் இன்று 19.03.2024 ம் தேதி மதியம் 12.00 மணிக்கு  காவல் ஆய்வாளர் சாலமோன் ராஜா அவர்கள் தலைமையில் படவேட்டம்மன் கோவில் ஜங்ஷன் அருகில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த ஒரு நபரிடம் விசாரணை செய்தபோது அந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறவே அந்த நபரை மீண்டும் விசாரணை செய்த போது அந்த நபர் தனது பெயரை நந்தகுமார் வயது 30 த/பெ வெங்கடேசன் அன்னை சத்யா நகர் வாலாஜா என்று கூறி தான் செய்த திருட்டு குற்றத்தை ஒப்புக்கொண்டார்.


அந்த நபர் கடந்த 13.03.2024 ம் தேதி இரவு வாலாஜா அரசு மருத்துவமணை ICU வார்ட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம்  தாலி சரடை திருடி சென்றதாகவும் அதைப்போல் கடந்த 11.03.2024 ம் தேதி இரவு 8.00.மணிக்கு வாலாஜா பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஹோட்டலிடம் நின்று கொண்டிருந்த அரும்பாக்கத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான  ஒரு பல்சர் வாகனத்தை திருடு சென்றதாகவும் கூறி ஒரு  வாக்குமூலம் கொடுத்தார்.


எதிரி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அந்த நபர்களிடமிருந்து சுமார் 4 கிராம் தங்கத் தாலி சரடு மற்றும் இருசக்கர வாகனம் ஒன்று ஆகியவற்றை கைப்பற்றி எதிரியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தாலி சரடு மற்றும் இருசக்கர வாகனத்தின் மதிப்பு சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஆகும்.

No comments:

Post a Comment

Post Top Ad