அதிமுக கட்சியின் ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த மாவட்டத்தின் சார்பில் இளைஞர் பாசறை,இளம் பெண்கள் பாசறை,மகளிர் அணி மாணவர் அணி, தகவல் தொழில் நுட்ப அணி ஆகிய அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.எம். சுகுமார் தலைமை தாங்கினார், நகர செயலாளர் சந்தோஷம் முன்னிலை வகித்தார், கிழக்கு மாவட்ட செயலாளர் சு.ரவி கண்டன உரை ஆற்றினார் அவர் பேசிய போது தமிழக அரசு பதவியேற்ற நாளிலிருந்து சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீர்கேடு அடைந்துள்ளதற்கும், தமிழகம் போதைப் பொருட்களின் கேந்திரமாக மாறி, போதைப் பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளதற்கும் காரணமான இருக்கின்றது என்று பல்வேறு கருத்துக்களை பேசினார், இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment