ராணிப்பேட்டையில் போதை பொருளை ஒழிக்க வலியுறுத்தி அதிமுக மாபெரும் ஆர்ப்பாட்டம்! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 4 March 2024

ராணிப்பேட்டையில் போதை பொருளை ஒழிக்க வலியுறுத்தி அதிமுக மாபெரும் ஆர்ப்பாட்டம்!


ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை பேருந்து நிலையத்தில் அஇஅதிமுக சார்பில் தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் பயன்பாட்டை ஒழிக்க வலியுறுத்தி அதிமுக-வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். முன்னாள் தமிழக முதல்வரும், எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக பொதுச்செயலாளருமான. எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க, ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும், அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினருமான சு.ரவி எம்.எல்.ஏ தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதில் சோளிங்கர் முன்னாள் எம்.எல்.ஏ. சம்பத், ஒன்றிய செயலாளர்கள். விஜயன், அருணாபதி, பிரகாஷ், பழனி, அரக்கோணம் நகர செயலாளர். பாண்டுரங்கன், மாநில வர்த்தக அணி துணை செயலாளர். மான்மல், மாவட்ட துணை செயலாளர். தயாளன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர். பாலு, மாவட்ட பாசறை செயலாளர். அன்பரசு, தகவல் தொழில்நுட்ப அணி. புருஷோத்தமன், நெமிலி நகர செயலாளர். செல்வம், பொருளாளர். நவநீதகிருஷ்ணன், ஒன்றிய மாணவரணி. முருகன், டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர். சங்கர், அரக்கோணம் நகராட்சி கவுன்சிலர்கள். பாபு, சரவணன், ஓச்சலம் நிர்வாகி. மணிகண்டன், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர். டோமேஷ் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.


- செய்தியாளர் பிரகாசம்

நெமிலி தாலுகா 

No comments:

Post a Comment

Post Top Ad