ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் தேமுதிக சார்பில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் அரக்கோணம் நகரத்தின் செயலாளர் கே.ஆர். சுமன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும், முன்னாள் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினருமான பி.ஆர். மனோகரன் கலந்து கொண்டு மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் கழக நிர்வாகிகளிடம் கட்சியின் எதிர்கால வளர்ச்சி, தேர்தல் வெற்றி, தேர்தலை எப்படி தோழர்கள் கையாள வேண்டும், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து பேசினார்.
இதில் மாநில தொழிற்சங்க துணை செயலாளர் கே.வி. பாலாஜி, மாவட்ட பொருளாளர், அசோகன், த.செ.கு.உறுப்பினர். ஏகாம்பரம், கோபி, சரவணன், நெமிலி மேற்கு ஒன்றிய செயலாளர். வினோத் நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளர். மூர்த்தி, பனப்பாக்கம் பேரூர் செயலாளர். காவி, நெமிலி முன்னாள் ஒன்றிய செயலாளர்கள். வெங்கட்ரத்தினம், ரவி, பிரபாகரன், ஹேமலதா பாலாஜி, ஏகாம்பரம், நெமிலி ஒன்றிய செயலாளர். ஸ்ரீதர், பனப்பாக்கம் நகர தேமுதிக துணை செயலாளர். யுவராஜ் மற்றும் நகர, ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா
No comments:
Post a Comment