ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி (புன்னை) அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து மருத்துவ முகாம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ரவிதேவி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை மாவட்ட வட்டாரத் துணை இயக்குனர் மணிமாறன் கலந்து கொண்டு 5 வயதிற்குட்பட்ட மருந்து குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார்.
புன்னை மருத்துவமனை சார்பில் நெமிலி பேருந்து நிலையம் பனப்பாக்கம் பேருந்து நிலையம் மற்றும் ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது இதில் மருத்துவர்கள் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா
No comments:
Post a Comment