வாலாஜாபேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அம்மன்தாங்கல் கிராமத்தில் கடந்த 08.02.2024 ம் தேதி மாலை 4.45 மணிக்கு அம்மனந்தாங்கல் பாலாஜி நகர் அருகில் உள்ள முருகன் கோவிலிடம் அம்மு வயது 32 க/பெ ஜெகன் என்ற பெண் ஒரு கல்லூரியில் வேலை செய்துவிட்டு நடந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது அந்த வழியை இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு நபர் திடீரென அந்தப் பெண் அணிந்திருந்த தாலி சரடை பறித்துவிட்டு சென்றுள்ளதாக கொடுத்த புகாரின் படி வழக்கு பதிவு செய்து மேற்படி நபரை காவல் ஆய்வாளர் திரு சாலமோன் ராஜா அவர்கள் தலைமையிலான போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் அரக்கோணம் தாலுகா காவல் நிலைய பகுதியில் நடந்த ஒரு செயின் பறிப்பு குற்றத்தில் ஈடுபட்டு வேலூர் மத்திய சிறையில் இருந்து வந்த சீனிவாசன் வயது 35 த/பெ பிரகாஷ் காமராஜர் தெரு சோளிங்கர் தாலுகா என்பவரை இன்று வாலாஜா நீதிமன்றத்தின் மூலமாக நீதிமன்ற காவலுக்கு எடுத்து மேற்படி சீனிவாசன் என்பவரிடமிருந்து சுமார் 1 1/2 சவரன் மதிப்புள்ள பொன் நகையை கைப்பற்றி மேற்படி சீனிவாசனை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டன.
மேற்படி சீனிவாசனுக்கு அரக்கோணம் தாலுகா காவல் நிலையம் மற்றும் சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் செயின் பறிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- வடமேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444...
No comments:
Post a Comment