அதிமுக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிவேட்பாளர் அறிமுக கூட்டம். - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 23 March 2024

அதிமுக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிவேட்பாளர் அறிமுக கூட்டம்.


ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக கூட்டம் ராணிப்பேட்டை தொகுதி சார்பில் வாலாஜாவிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் எஸ். எம். சுகுமார், தலைமை தாங்கி அனைவரையும் வரவேற்றுப் பேசினார், ராணிப்பேட்டை  கிழக்கு மாவட்ட செயலாளர் சு.ரவி  வேட்பாளர் ஏ.எல்.விஜயனை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.

இந்நிகழ்வின் போது மாவட்ட துணைச் செயலாளர்  டபிள்யூ எஸ் வேதகிரி, முன்னாள் மாவட்ட செயலாளர் சுமைதாங்கி ஏழுமலை, வாலாஜா நகர செயலாளர் டபுள்யு எஸ்.மோகன், ராணிப்பேட்டை நகர செயலாளர் சந்தோசம், விசாரம் நகர செயலாளர் இப்ராஹிம் கலியுல்லா, தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் எழில், மகளிர் அணி மாவட்ட செயலாளர் ராதிகா, கூட்டணி கட்சியை சேர்ந்த   எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்,எஸ் டி பி ஐ கட்சியின்  ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் கரீம் பாய், உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர கிளை செயலாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad