நெமிலி பேருந்து நிலையத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து, பொதுமக்கள் 500 நபர்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் (பிரியாணி) வழங்கப்பட்டது. நெமிலி காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு, போக்குவரத்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, தலைக்கவசங்கள் வழங்கப்பட்டன. அதைத்தொடர்ந்து திருமால்பூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு 40 மின்விசிறிகள் வழங்கப்பட்டன.
மேலும் சம்பத்துராயன்பேட்டை கிளைக் கழகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் (பிரியாணி) வழங்கப்பட்டது. இதுபோன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி, தமிழ்நாடு முதலமைச்சரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர். பவானி வடிவேலு, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர். சரவணன், நெமிலி பேரூராட்சி மன்றத் தலைவர். ரேணுகாதேவி சரவணன், ஒன்றிய கழக நிர்வாகிகள். புருஷோத்தமன், பாண்டியன், முகமது அப்துல் ரகுமான், அரிகிருஷ்ணன், நெமிலி பேரூர் கழக நிர்வாகிகள். சேகர், சுகுமார், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழகநிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.
No comments:
Post a Comment