நெமிலி அருகே வேட்டாங்குளம் கிராமத்தில் புளூ ஸ்டார் அணியினர் நடத்திய கைப்பந்து போட்டி! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 29 April 2024

நெமிலி அருகே வேட்டாங்குளம் கிராமத்தில் புளூ ஸ்டார் அணியினர் நடத்திய கைப்பந்து போட்டி!


ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த வேட்டாங்குளம் கிராமத்தில் வேட்டாங்குளம் புளூ ஸ்டார் அணியினர் முதல் பரிசு - ரூ.15,015 + 7 அடி கோப்பை இரண்டாம் பரிசு - ரூ.12,012 + 6 அடி கோப்பை மூன்றாம் பரிசு - ரூ. 8,008 +5 அடி கோப்பை நான்காம் பரிசு ரூ. 6,006 + 4 அடி கோப்பை ஐந்தாம் பரிசு - ரூ.4,004 + 2 அடி கோப்பை ஆறாம் பரிசு - ரூ.2002 + 2 அடி கோப்பை ஏழாம் பரிசு - ரூ.1,001 + 2 அடி கோப்பை எட்டாம் பரிசு - ரூ.1,001 + 2 அடி கோப்பை என பரிசு பொருட்களை அறிவித்து கைப்பந்து போட்டியை இரண்டு நாட்களாக நடத்தினர்.


இதில் 40க்கும் மேற்பட்ட அணியினர் கலந்துகொண்டு விளையாடினர். இதில் சிறப்பாக விளையாடிய நெமிலி அணியினர் முதல் பரிசும், வேட்டாங்குளம் புளூ ஸ்டார் அணியினர் இரண்டாம் பரிசு மற்றும் ஐந்தாம் பரிசும், திருப்பருதிகுன்றம் அணியினர் மூன்றாம் பரிசும், தண்டலம் அணியினர் நான்காம் பரிசும், மாரிமங்கலம் அணியினர் ஆறாம் பரிசும், வாலாஜாபாத் அணியினர் ஏழாம் பரிசும், திருத்தணி அணியினர் எட்டாம் பரிசும் வென்றனர்.


போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு முதல் பரிசை - கவிதா ஸ்ரீதர், இரண்டாம் பரிசை - ஆரோன், எஸ்ரோன், மூன்றாம் பரிசை - பார்த்தசாரதி, விஜயபாஸ்கர், நான்காம் பரிசை - பிச்சைமுத்து, மோனிஷ் கண்ணன், ஐந்தாம் பரிசை - சேரன், செல்வராசு, ஆறாம் பரிசு - ரோகித், ஏழாம் பரிசை - வினோத் குமார், எட்டாம் பரிசை - ஜெயசூர்யா ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு யுவராஜ், பாலகிருஷ்ணன், சிவக்குமார் ஆகியோர் அன்னதானம் வழங்கினர்.


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா 

No comments:

Post a Comment

Post Top Ad