நெமிலியில் தண்ணீர் பந்தல் இல்லாத கோடை காலம் பயணிகள் கடும் அவதி! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 25 April 2024

நெமிலியில் தண்ணீர் பந்தல் இல்லாத கோடை காலம் பயணிகள் கடும் அவதி!


ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேருந்து நிலையத்தில் தண்ணீர் பந்தல் இல்லாததால் கோடை வெயிலில் தாகத்தை தவிர்க்க தண்ணீர் இல்லாமல் பயணிகள் கடும் அவதி நெமிலி, கறியாகுடல், சிறுணமல்லி, நாகவேடு அசநெல்லிகுப்பம், சயனபுரம், புன்னை, கீழ்விதி, பெரப்பேரி, வெளிதாங்கிபுரம், கோடம்பாக்கம், மகேந்திரவாடி, மானாமதுரை, எலத்தூர், அகவலம் வேட்டாங்குளம் மற்றும் நெமிலியை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து தினமும் 1000-த்திற்கும் மேற்பட்ட பயணிகள் வெளியூர் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு செல்ல நெமிலி பேருந்து நிலையத்திற்கு வந்து பயணம் செய்கின்றனர். 

ஆண்டுதோறும் கோடை காலம் தொடங்கியவுடன் அரசியல் கட்சியினர் தங்கள் கட்சியின் சார்பில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர், இளநீர், தர்பூசணி மற்றும் பழச்சாறு வழங்குவது வழக்கம் சென்ற வாரம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றதால் தேர்தல் நடத்தை விதி மீறல் மற்றும் தேர்தல் பரப்புரையில் அரசியல் கட்சியினர் மழு கவனம் செலுத்தினர். தேர்தல் முடிந்து ஒரு வாரம் ஆகியும் அரசியல் கட்சியினர் யாரும் தண்ணீர் பந்தல் அமைக்காததால் பயணிகள் ஏமாற்றத்துடன் பேருந்து நிலையத்தை முறைத்து பார்த்து விட்டு முகம் சுழித்து அருகில் உள்ள கடைகளுக்கு சென்று பணம் கொடுத்து தண்ணீர் கேன் வாங்கி செல்கின்றனர் பேருந்து நிலையத்தில் உடனடியாக தண்ணீர் பந்தலை அரசியல் கட்சியினரோ அல்லது பேரூராட்சி நிர்வாகமோ அமைத்து தர வேண்டும் என பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


 - செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா 

No comments:

Post a Comment

Post Top Ad