அப்போது அவர் பேசியதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்று 33 மாதங்களில் பல எண்ணற்ற சாதனை திட்டங்களை செய்துள்ளது இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வருமேயானால் காஸ் விலை ₹1200-லிருந்து ₹500 ஆக குறைக்கப்படும். பெட்ரோல் விலை ₹75 ஆக குறைக்கப்படும். 100 நாள் வேலைத்திட்டம் 150 நாளாக உயர்த்தி ₹400 ஆக கூலி உயர்த்தி வழங்கப்படும். மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கும் விரைவில் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் அனைத்து பெண்களும் இலவசமாக பஸ் பயணம் செய்யலாம் என்ற திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏழை, எளிய பிற்படுத்தப்பட்ட மக்களை நசுக்கும் ஒன்றியத்தில் உள்ள மோடி ஆட்சியை அகற்ற, தமிழ்நாட்டில் நல்லாட்சி தொடர எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டுகிறேன்.
மேலும் இளைஞர்களுக்கு வேலை அதிக அளவில் வேலைவாய்ப்பு கிடைப்பதற்கு புதிய தொழிற்சாலைகள் கொண்டு வரப்படும். அன்வர்த்திகான்பேட்டையில் பல்வேறு எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல ஏற்பாடுகள் செய்யப்படும் அதேபோல் சேந்தமங்கலத்தில் புதிய ரயில்நிலையம் கொண்டு வரப்படும் இவ்வாறு அவர் பேசினார். இதில் செயற்குழு உறுப்பினர். கண்ணையன், மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள். சக்கரவர்த்தி, கிருஷ்ணன், மூர்த்தி, பாபு, பாலன், ராமலிங்கம், குப்புசாமி, சுரேஷ், பாஸ்கரன், குலோத்துங்கன், ஜானகிராமன், புருஷோத்தமன், ராகுல், மாவட்ட கவுன்சிலர்கள். அம்பிகா பாபு, சுந்தராம்பாள் பெருமாள், நகராட்சி திமுக கவுன்சிலர்கள் குழு தலைவர். துரை சீனிவாசன், நகராட்சி கவுன்சிலர்கள். நந்தா தேவி, ராஜலட்சுமி, ஒன்றிய கவுன்சிலர். பிரசாத் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள். ராஜ்குமார், பார்த்தசாரதி, இளைய நிலா, கௌதம், தமிழ்மாறன், நரேஷ், பாக்கியராஜ் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா
No comments:
Post a Comment