வாலாஜாபேட்டை பகுதிகளில் 2 சக்கர வாகனங்கள் திருடிய வாலிபர் கைது! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 13 May 2024

வாலாஜாபேட்டை பகுதிகளில் 2 சக்கர வாகனங்கள் திருடிய வாலிபர் கைது!

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வி.சி. மோட்டூர் அருகே காவல் ஆய்வாளர் சாலமன் ராஜா தலைமையிலான போலீசார் தீவிர வாகன தணிக்கை செய்து கொண்டிருக்கும் போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த அனந்தலை கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரின் மகன் அருள் (வயது32) என்பவரை மடக்கி விசாரித்தபோது அருள் போலீசாரிடம் முன்னுக்கும் பின்னுமாக பதில் அளித்தார்.இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அருளை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிரமாக விசாரணை செய்தனர். விசாரணையில் தான் செய்த இருசக்கர திருட்டுக் குற்றத்தை ஒப்புக்கொண்டார். மேலும், அருள் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனை அருகில் மற்றும் 09.05.2024 ம் தேதி வாலாஜா சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் 24.04.2024 ம் தேதி முசிறி கல்குவாரி மற்றும் வாலாஜா பேருந்து நிலையம் அருகில் இரண்டு டூ வீலர் ஆகிய இடங்களில் இருந்து ஐந்து இருசக்கர வாகனங்களை திருடிச்சென்ற குற்றத்தை ஒப்புக்கொண்டார். 


பின்னர் போலீசார் அருள் என்பவரிடமிருந்து 5 டூவீலர்களை கைப்பற்றி அருள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் கைப்பற்றப்பட்ட வாகனங்களின் மதிப்பு சுமார் ரூபாய் 2 லட்சத்து 50 ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது் 


- மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு: 9150223444.

No comments:

Post a Comment

Post Top Ad