ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டம் பொய்கைநல்லூர் கிராமத்தில் எழுந்தருளிக் கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ உலகாத்தம்மன், அருள்மிகு ஸ்ரீ சிரைகாத்தம்மன், அருள்மிகு ஸ்ரீ துர்காளியம்மன் ஆலய தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. அருள்மிகு சக்தி அம்மா சக்திமோகானந்த சுவாமிகள் கலந்துக்கொண்டு ஆலய தேர் வெள்ளோட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.ஜி.சி பெருமாள், நெமிலி மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.பி ரவீந்திரன், நெமிலி மேற்கு ஒன்றிய இளைஞர் அணி. சதீஷ் ஆகியோர் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். இதில் கிராம பொதுமக்கள்
கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா
No comments:
Post a Comment