ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேருந்து நிலையம் மற்றும் வேட்டாங்குளம் கிராமத்தில் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் 70-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தண்ணீர் பந்தல் திறப்பு விழா மற்றும் பிறந்தநாள் விழா நெமிலி நகர செயலாளர். செல்வம் தலைமையில், நெமிலி நகர பொருளாளர். நவநீதகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக செயலாளரும், அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினருமான சு.ரவி எம்.எல்.ஏ கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இளநீர், நீர்மோர், பழச்சாறு மற்றும் இனிப்புகள் வழங்கி பிறந்தநாள் விழா கொண்டாடினார்.
இதில் மாவட்ட துணை செயலாளர். தயாளன், மாவட்ட பாசறை செயலாளர். அன்பரசு, விவசாய அணி செயலாளர். திருமலை, அவைத்தலைவர். சத்தியமூர்த்தி, மாணவர் அணி செயலாளர். முருகன், நெமிலி மேற்கு ஒன்றிய செயலாளர். அருணாபதி, மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர். டோமேஷ், கழக நிர்வாகிகள். வினோத், கணேஷ், நாகராஜன், பரந்தாமன், சுகுமார், வேட்டாங்குளம் ஊராட்சி மன்ற தலைவர். சாந்தி ரவி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். ஆரோன், துணைத்தலைவர். அன்னியப்பன், கழக நிர்வாகிகள். வேலன், கார்த்திகேயன், வேலு மற்றும் அதிமுக கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர். இறுதியில் வேட்டாங்குளம் கிராமத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா
No comments:
Post a Comment