வெற்றி பெற்ற பரிசு பொருட்களுடன் வேட்டாங்குளம் இளைஞர்கள் சாமி தரிசனம்! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 5 May 2024

வெற்றி பெற்ற பரிசு பொருட்களுடன் வேட்டாங்குளம் இளைஞர்கள் சாமி தரிசனம்!

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த வேட்டாங்குளம் கிராமத்தில் சென்ற மாதம் 27, 28 ஆகிய தேதிகளில் வேட்டாங்குளம் புளூ ஸ்டார் அணி சார்பில் கைப்பந்து போட்டி நடைபெற்றது இதில் 40-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடினர். 


இதில் வேட்டாங்குளம் புளூ ஸ்டார் அணியினர் இரண்டு மற்றும் ஐந்தாம் பரிசை வென்றனர். நேற்று ஸ்ரீ காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது அப்பொழுது போட்டியில் வெற்றி பெற்ற பரிசு பொருட்களுடன் புளூ ஸ்டார் அணியினர் ஊர்வலமாக எடுத்துச் சென்று அம்மன் சன்னதியில் வைத்து அடுத்து வரும் காலங்களில் எங்கள் அணி போட்டியை இன்னும் சீராகவும் சிறப்பாகவும் நடத்த வேண்டும் என வேட்டாங்குளம் புளூ ஸ்டார் அணியினர் சாமி தரிசனம் செய்தனர். 


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா

No comments:

Post a Comment

Post Top Ad