நெமிலி அருகே வேட்டாங்குளம் கிராமத்தில் வெகு விமர்சையாக நடைபெற்ற ஸ்ரீ காளியம்மன் கோவில் திருவிழா! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 5 May 2024

நெமிலி அருகே வேட்டாங்குளம் கிராமத்தில் வெகு விமர்சையாக நடைபெற்ற ஸ்ரீ காளியம்மன் கோவில் திருவிழா!

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த ஸ்ரீ காளியம்மன் கோவில் திருவிழா சுகந்தி ராமதாஸ் தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. வேட்டாங்குளம் ஊராட்சி மன்ற தலைவர். சாந்தி ரவி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர். கவிதா சிவகுமார் முன்னிலை வகித்தனர். 


கோவில் அறங்காவலர் சிவஞானமூர்த்தி வரவேற்புரை வழங்கினார். இந்நிகழ்வில் காலை 5 மணிக்கு அம்மனுக்கு பால் அபிஷேகம், காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு பால்குடம் எடுத்தல், 10 மணிக்கு அம்மனுக்கு சக்தி கொண்டு வருதல், 11 மணிக்கு சேந்தமங்கலம் மூர்த்தி குழுவினரின் பம்பை சிலம்பாட்டத்துடன் அம்மனுக்கு பொங்கல் வரிசை புறப்பாடு, மாலை 6:00 மணிக்கு அம்மனுக்கு மகா அபிஷேகம் தீபாராதனை, 6:30 மணிக்கு கோயில் காளை மாடு வீரதீர விளையாட்டு நிகழ்ச்சியை தொடர்ந்து இரவு 9:00 மணிக்கு குடியாத்தம் குழுவினரின் ராஜமேளத்துடன் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. 


மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை சிறப்பு அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாட்டாண்மை பொன்.கோ. சங்கர், பெருதானம். மணி, காசாளர். பாலகுரு, கோயில் பிள்ளை. முத்துகிருஷ்ணன், விழா குழு உறுப்பினர்கள். குமரேசன், ரமேஷ், வில்வநாதன், ரோசி, படவேட்டான், கோயில் பூசாரி. பெருமாள் மற்றும் வேட்டாங்குளம் ஊர் பொதுமக்கள் சார்பில் ஸ்ரீ காளியம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திருத்தணி, காஞ்சிபுரம், சென்னை, ராணிப்பேட்டை, ஆற்காடு, பெங்களூர் ஆகிய ஊர்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 



- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.

No comments:

Post a Comment

Post Top Ad