அரக்கோணம் அருகே அன்வர்த்திகான்பேட்டை ரயில் நிலையத்தில் ஆபத்தை உணராமல் ரயில்வே கேட்டை கடந்து செல்லும் பயணிகள்! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 20 May 2024

அரக்கோணம் அருகே அன்வர்த்திகான்பேட்டை ரயில் நிலையத்தில் ஆபத்தை உணராமல் ரயில்வே கேட்டை கடந்து செல்லும் பயணிகள்!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த அன்வர்திகான்பேட்டை ரயில் நிலையத்தில் அரக்கோணத்தில் இருந்து பெங்களூர் செல்லும் ரயில்வே வழித்தடத்தில் ரயில் வருவதற்கு முன் போடப்படும் கேட் (பூம்) மீண்டும் திறப்பதற்கு அரை மணியிலிருந்து முக்கால் மணி நேரம் வரை ஆகிறது. இதனால் நோயாளிகள் மருத்துவமனைக்கு செல்ல சிரமப்படுகின்றனர் பயணிகளும் காத்திருப்பதில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். 



ஒரு சில பயணிகள் ஆபத்தை உணராமல் கேட் (பூம்) திறப்பதற்குள் அதன் கீழே நுழைந்து செல்கின்றனர். காட்டுப்பாக்கம், எலத்தூர், மேல்களத்தூர், அன்வர்த்திகான்பேட்டை, மின்னல் மற்றும் ஆவதம் பகுதியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அன்வர்த்திகான்பேட்டை ரயில் நிலையத்திற்கு சென்று பிற ஊர்களுக்கு பயணம் செய்கின்றனர். 


இதை கருத்தில் கொண்டு தமிழக அரசு 24.69 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்ட அனுமதி அளித்து ஜனவரி மாதம் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. மேம்பாலம் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதால் பயணிகள் ஆபத்தை உணராமல் ரயில்வே கேட்டை கடந்து செல்கின்றனர் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாற்றுகின்றனர். ரயில்வே மேம்பாலத்தை உடனடியாக கட்டி திறந்து பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா

No comments:

Post a Comment

Post Top Ad