ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த வேட்டாங்குளம் (சில்வர்பேட்டை) கிராமத்தில் ஸ்ரீ ஆதிபராசக்தி அம்மன் திருக்கோவில் திருவிழா வேட்டாங்குளம் ஊராட்சி மன்ற தலைவர். சாந்தி ரவி, துணைத்தலைவர். கவிதா சிவக்குமார் தலைமையில், நாட்டாண்மை. ஆண்டவன், பெருதனம். சக்கரபாணி, கோயில் பிள்ளை. மோகன், அசோக்குமார் முன்னிலையில், சேகர், பொன்னுரங்கம், கிருஷ்ணன், ஆறுமுகம், பாபு, விஜயகாந்த், வரவேற்பில் ஸ்ரீ ஆதிபராசக்தி அம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. காலை 7:30 மணிக்கு சேந்தமங்கலம் மூர்த்தி குழுவினரின் பம்பை சிலம்பாட்டத்துடன் அம்மனுக்கு பால் அபிஷேகம், பிற்பகல் 12 மணிக்கு ஸ்ரீ கன்னியம்மனுக்கு கூழ்வார்த்தல், பிற்பகல் 2 மணிக்கு பொங்கல் வரிசை புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு மகா அபிஷேகம், புஷ்ப அலங்காரம் நிகழ்ச்சியை தொடர்ந்து இரவு 8 மணிக்கு சென்னை தெய்வீக சக்தி நடன கலைக்குழவினரின் நடன நிகழ்ச்சியோடு அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அன்னியப்பன், நாகராஜ், கிருஷ்ணன், முனுசாமி, ராமு, மூர்த்தி, முனுசாமி, ஆண்டவன், பாபு, அசோக்குமார், குமரேசன், ஆறுமுகம், குமார், குமரன், கமல்ராஜ், ராஜராஜன், அசோக்குமார், நேதாஜி, கோவில் பூசாரி. பெருமாள் ஆகிய விழா ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் ஸ்ரீ ஆதிபராசக்தி அம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. லோகேஷ் எஸ்.ஐ, முனுசாமி பி.சி, பாஸ்கரன் பி.சி, ஜெயகாந்த் பி.சி, வாஞ்சி பி.சி, உலகநாதன் பி.சி மற்றும் பிரவீணா பி.சி ஆகியோர் நெமிலி காவல்துறை சார்பில் திருவிழாவிற்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருவிழாவிற்கு சிறப்பு அன்னதானம் உபயம். ராணிப்பேட்டை மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் வி.எஸ் முரளி வழங்கினார்.
No comments:
Post a Comment