ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த அனந்தாபுரத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவர் தக்கோலம் பேரூராட்சியில் ஒட்டுனராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி நதியா (38). இவர்களுக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். காலை தனது வீட்டின் பின்புறம் உள்ள நிலத்தில் பம்புசெட் மின் மோட்டாரை நிறுத்தச் சென்றார்.
அப்போது மின்மோட்டார் ஸ்விட்சில் இருந்து மின் கசிவு ஏற்பட்டு நதியா உடலில் மின்சாரம் பாய்ந்தது . இதில் அவர் மயங்கி கீழே விழுந்தார். அவரை கிராம மக்கள் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சில நிமிடங்களில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தக்கோலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பம்புசெட் மின்மோட்டாரை நிறுத்தச் சென்ற பெண் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அனந்தாபுரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
- மாவட்ட செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.
No comments:
Post a Comment